செல்வி(Actual name changed to protect the identity) அணைக்கட்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி. செல்வி, மையத்தில் முதலில் சேர்ந்தபோது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுத்துக்களைச் சரியாக அடையாளம் காண இயலாத நிலையில் இருந்தாள்.

தற்போது, கதை ரதம் மூலமாகப் பாடல், கதை கூறுதல், புதிய கதைகளை உருவாக்குதல், பொம்மலாட்டம், ஓவியம், கதைகளில் வரும் கதாபாத்திரங்களாக நடித்துக் காட்டுதல், போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குகிறாள்.

மேலும் கற்றல் திறனில் எழுத்துக் கூட்டிப் படிக்கும் நிலைக்கு உயர்ந்து இருக்கிறாள். கதை ரதம் மூலம் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளாள். இதற்கு உதவியாக இருந்த கதை ரதம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Translation: Selvi is studying in third grade in Anaicut RSTC. When she started with us she was not able to identify letters. After being part of Katha On Ratha program, she participates eagerly in multiple activities such as storytelling, constructing her own story, dramatising stories, and puppet shows.

She has shown marked improvement in reading over time. We thank Katha On Ratha that has helped children like Selvi.

…..Ms. Sevvandhi, Reading Coach, Anaicut RSTC, Hand in Hand.

To Top